Monday, 22 July 2019

நன்னூல் வகைபாடுகள்

நன்னூல் வகைபாடு 2


நன்னூல் வகைபாடு 3

நன்னூல் வகைபாடு 1

ஜோதிடத்தில் அனுபவம் என்றால் என்ன?

நமது பாரம்பரியத்தில் ஏகப்பட்ட மூல நூல்கள் இருக்கிறது. அதன் விபரங்கள் உங்களுக்காக
ஜோதிட பாரம்பரிய மூல -நூலின் பெயரும்- ஆசிரியரும் பின்வருமாறு :
பிருஹத் பராசர ஹோரா - பராசர மகரிஷி
பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்
உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்...
சாராவளி - கல்யாண வர்மர்
பலதீபிகை - மந்திரேஸ்வரர்
ஜாதக சிந்தாமணி = தில்லை நாயக புலவர்.
ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி
ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்
குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்
கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி
ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி
ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்
சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி
சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை
சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி நம்பி
ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி
ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை
ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம் பிள்ளை
வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க குருக்கள்
பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க ஜோதிடர்
ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்
மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க ஆசாரியார்
ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்
காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்
பாரம்பரிய முறையை தவிர்த்து இன்னும் ஜோதிடத்தில் பல முறைகள் இருக்கின்றன அவைகள் உங்களுக்காக
நாடி,
ஜெய்மினி,
கே பி,
பிருகு சரல் பதத்தி.,
பிருகு சக்கர பதத்தி,
இன்னும் பல முறைகள் இருக்கின்றன.
================================================
அனுபவம் என்றால் என்வென்று அழகாக திரு.ஜோசியம் ராமு ஐயா, அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு இன் நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அனுபவம்
-- இப்படிப்பட்ட நூல்களும் முறைகளும் நிறையாக இருக்கிறது. எல்லவாற்றையும் கற்று தேர்வது என்பது மிகவும் கடினம். மேலும் பலன் உரைக்கும் விதிமுறைகளை அறிவுருத்தும் நூல்களும், அதன் உரைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. இவைகளை ஆய்வு செய்து,
""எந்த வழிமுறை நமக்கு பலிதமாகிறது என்று தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் சென்று விடும். இந்த ஆண்டுகளின் எண்ணிக்கையே அனுபவம் என்கிறோம்.""
இதை பயிற்சி நிலையங்களில் பெற இயலுவதில்லை. இதையும் தாண்டி இன்னொரு விஷயமும் உள்ளது. அதுவே தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும். கல்வியில் மிக குறைந்தவர்கள் கூட மிக சரியாக ஆச்சரியப்படும் வகையில் பலன் உரைப்பதை நாம் அறிவோம். இதற்கு காரண்ம் இறையருளும், குருவருளும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்,, இந்த தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும். இதை நம்மால் எந்த விலை கொடுத்தும் வாங்க இயலாது. இப்படி பலன் உரைப்பதில், அனுபவமும், தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமும் நமக்கு கிடைக்க, வாக்குஸ்தானமும், பாக்கியஸ்தானமும், குருவும் நல்ல முறையில் நம் ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த அமைப்புகளை பொறுத்தே ஒருவர் வெற்றிகரமான, சிறந்த ஜோதிடராக திகழமுடிகிறது.
நன்றி

உலகம் போற்றும் தொல்காப்பியம்

உலகிலுள்ள ஒவ்வொரு மொழியும் ஒரு சிறப்பான தன்மையைப் பெற்றிருக்கும். அச்சிறப்பு மக்கள், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும். இதே வகையான நிலை தமிழுக்கும் இருந்தாலும் மற்ற மொழி பேசுவோர் சிந்தித்ததைவிடப் பழந்தமிழர் மேலும் அதிகமாகச் சிந்தித்துள்ளார்கள். இதனாலேயே மற்றைய உலக மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு இருக்கின்றது. இதனாலேயே உலக அளவில் அறிஞர் பெருமக்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பாராட்டுகின்றார்கள்.
தமிழுக்கு அந்தப் பெருமை வருவதற்கான காரணம் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்ததேயாகும். பொதுவாக, உலகிலுள்ள பழமையான மொழிகளில் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. மொழியின் எழுத்து, சொல், தொடர் பற்றியே அவை விளக்குகின்றன. இம்முறை தொல்காப்பியம் முதலான எல்லாத் தமிழ் இலக்கணங்களிலும் காணப்படுகின்றது. கூடுதலாகப் பழந்தமிழ்ச் சான்றோர் அவர்கள் வாழ்ந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளனர்.
தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை எனத் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தமிழ்மொழிக்குத் தற்போது கிடைத்துள்ள தரவு அடிப்படையில் பார்க்கும்போது ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. தொல்காப்பியமே தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகும். பத்துப்பாட்டு, எட்டுத் தொகையும் தொன்மையான இலக்கியங்கள் ஆகும். இந்நூல்கள்வழி ஒரு செழுமையான இலக்கண - இலக்கிய மரபை அறிந்துகொள்ள முடிகின்றது, இவ்வகையான ஒரு செழுமை கிடைத்துள்ள நூல்களில் இருப்பதற்குக் காரணம் அவற்றுக்கு முன் ஒரு செழுமையான மரபு இருந்ததேயாகும்.
தமிழ் இலக்கியங்கள் வழியும் தொல் பொருட் சான்றுகள் வழியும் ஆழிப் பேரலையால் பழந் தமிழகத்தின் தெற்கிலும் கிழக்கிலும் நிலப்பகுதி கடல் கொண்டதை அறிய முடிகின்றது. பழந்தமிழர் மூன்று சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்துள்ளார்கள். முதல் இரண்டு சங்கங்கள் இருந்த பகுதி கடல் கோளால் அழிய அக்காலங்களில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அழிந்து விட்டன. தொல்காப்பியத்தில் என்ப, மொழிப, என்மலர் எனக் குறிக்கப்படும் சொற்களைக் கொண்டே தமிழில் இப்போது கிடைத்துள்ளவற்றுக்கு முன்னுள்ள மரபை அறிந்துகொள்ளலாம்.
தொல்காப்பியத்தின் காலம் பற்றி அறிஞர் களிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. கி.பிக்கு முந்தையது என்று பல அறிஞர்களும் பிந்தையது என்று சிலரும் குறிப்பிடுகின்றார்கள். காலக் கணக்கில் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தோராயமாகத் தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. அச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.
தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும். இவ்வகையான ஆய்வு வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படையான முந்தைய நிலையை ஆய்வாளர் இரா. வெங்கடேசன் அரிதின் முயன்று தொல்காப்பியம் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துத் ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இந்த அரிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (2014) வெளியிட்டுள்ளது.
தொல்காப்பிய உரைகள், பதிப்புகள், ஆய்வாளர் களின் கருத்துக்கள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மேலும் உதவும் வகையில் உள்ளது என உறுதியாகக் கூறலாம்.
தொல்காப்பியர் வரலாறு, காலம், பதிப்புக்கள், உரையாசிரியர் என எதையும் ஒதுக்கிவிடாமல் பதிப்பாசிரியர் இரா. வெங்கடேசன் எல்லாவற்றையும் தொகுத்து ஒருமுகப்படுத்தியுள்ளார். பின்வருமாறு ஐந்து பகுதிகளாகப் பகுத்துக் கொள்கின்றார்.
1.            தொல்காப்பியர் வரலாறு
2.            தொல்காப்பியர் காலம்
3.            தொல்காப்பியப் பதிப்புரைகள்
4.            உரையாசிரியர்கள் வரலாறு
5.            உரையாசிரியர்கள் உரைத்திறன்: ஏற்பும் மறுப்பும்
தமிழ்ப்புலமை மரபில் தொல்காப்பியம் என்னும் இந்நூல் தொகுப்பாக இருப்பதால் தம்முடைய கருத்தை ஆங்காங்கே சொல்லவில்லை; இருப்பினும் இருபத்தைந்து பக்க அளவில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைத் ‘தமிழில் இலக்கண உருவாக்கம்’ என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
1. தொல்காப்பியர் வரலாறு
இப்பகுதியில் புன்னைவனநாத முதலியாரும் சி.கணேசையரும் கூறியுள்ள கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் என்றும், காப்பியக் குடியில் பிறந்ததால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்றும் இறையனார் களவுரை காலத்திலிருந்து கூறப்படும் கருத்தாகும். நச்சினார்க்கினியர் இன்னொரு கருத்தைக் குறிப்பிடுகின்றார்: தொல்காப்பியரின் இயற் பெயர் திரணதூமாக்கினி என்றும், தந்தை பெயர் சமதக்கினி என்றும், தொல்காப்பியருடன் உடன் பிறந்தவர் பரசுராமர் என்றும் குறிப்பிடுகின்றார். நச்சினார்க்கினியரின் கருத்தை அனைவருமே ஐயங் கொண்டே பார்க்கின்றார்கள். உண்மையான வரலாறு இல்லாமையால் தொல்காப்பியரைப் போலப் பல சங்க காலப் புலவர்களும் கற்பனைக் கடலில் மிதக்கின்றார்கள்
2. தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியரின் வரலாற்றைப் போன்றே அவருடைய காலமும் இன்னும் ஆய்வுக்கு உரியதாகவே திகழ்கின்றது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்து கொண் டிருக்கும். அறிஞர்கள் அவரவர் சிந்தனைக்கு ஏற்பக் குறிப்பிடுகின்றார்கள். அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; ஒதுக்கிவிடவும் முடியாது. தொல்காப்பியம் தமிழுக்கும் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல்; தொல்காப்பியரின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அறிஞர்கள் குறிப் பிடும் தொல்காப்பியரின் காலத்தைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
புன்னைவனநாத முதலியார்   12000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
கா. சுப்பிரமணிய பிள்ளை      கி.மு.700ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டது
மயிலை சீனி. வேங்கடசாமி   கி.மு.800
எஸ் வையாபுரிப்பிள்ளை                   கி.பி.500
க.வெள்ளைவாரணர்               கி.மு.5000
3.தொல்காப்பியப் பதிப்புரைகள்
தொல்காப்பியம் தோன்றிய காலத்திலிருந்து செல் வாக்குப் பெற்று விளங்கியதை அதற்குத் தோன்றிய உரைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், கல்லாடர் எனப் பலர் தொல்காப்பியத் திற்கு உரை எழுதி இருக்கின்றார்கள். நன்னூல் தோற்றிய காலத்தில் தொல்காப்பியம் அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்ததை அறிய முடிகின்றது. அச்சுக்கலை வளர்ந்த பிறகு பல சான்றோர் பெருமக்கள் தொல்காப்பியத்தை உரைகளோடு பதிப்பித்தார்கள். பொருளதிகாரம் அனைவரின் கவனத்திற்கு வந்தபிறகு அதன் சிறப்பு மேலும் பரவலாகியது. இராபர்ட் கால்டுவெல் (1856) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை வெளியிடுவதற்கு முன்பே தொல் காப்பியம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனைப் பார்க்கும் வாய்ப்பை அவர் பெறவில்லை. தொல் காப்பியத்தை அறிந்திருந்தால் மேலும் தமிழில் பல சிறப்புக்களை இராபர்ட் கால்டுவெல் வெளிப்படுத்தி இருப்பார்.
தொல்காப்பியத்தைப் பலர் பதிப்பித்து வெளி யிட்டுள்ளார்கள். தொடக்க காலப் பதிப்பாசிரியர்களின் பதிப்புரைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மகாலிங்கையர் மழலை, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை, 1848
தாமோதரம் பிள்ளை சி.வை; தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை, 1868
1858 ஆம் ஆண்டில் சாமுவேல் பிள்ளை தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒத்த நூற்பாக்கள் அடிப்படையில் பதிப்பித்துள்ளார்
இப்பதிப்புக்களுக்குப் பிறகு பலர் தொல்காப்பி யத்தை விரிவாக ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டு இருக்கின்றார்கள். வ.உ.சிதம்பரனார், ரா.இராக வையங்கார், உ.வே.சாமிநாதையர், கா.நமச்சிவாய முதலியார், கா.சுப்பிரமணியபிள்ளை P.S. சுப்பிரமணிய சாஸ்திரி, சி.கணேசையர், ச.சோமசுந்தர பாரதியார் என இன்னும் பலரின் பதிப்புரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், இவற்றின் உரையாசிரியர்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.
4.உரையாசிரியர்களின் வரலாறு
தொல்காப்பியத்திற்கு உரைகள் மட்டும் இல்லை என்றால் இந்த அளவிற்குத் தொல்காப்பியத்தைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. மேலும் புரிதலுக்கு இக்கால ஆய்வுகள் பெரிதும் பயன்படுகின்றன. கிடைத் துள்ள உரைகளில் இளம்பூரணர் உரை காலத்தால் முந்தையதாகும். 13 ஆம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணர் உரை காணப்படுகின்றது.
சேனாவரையர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் காணப்படுகின்றது. வடமொழிப் புலமை மிக்க சேனாவரையர் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இதே நூற்றாண்டைச் சார்ந்த தெய்வச் சிலையாரின் உரையும் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே காணப்படுகின்றது.
நச்சினார்க்கினியர் உரை எழுத்து, சொல், பொருளதிகாரத்தில் முன்னுள்ள ஐந்து இயல்களுக்கும் காணப்படுகின்றது. இவரது காலமும் 14 ஆம் நூற்றாண்டாகவே கருதப்படுகின்றது. இதே காலக் கட்டத்தில் தோன்றிய பேராசிரியரின் உரை பொருளதி காரத்தில் பின் நான்கு இயல்களுக்கு மட்டுமே காணப் படுகின்றது. கல்லாடர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் காணப்படுகின்றது. முழுமையாகக் கிடைக்க வில்லை. இவர், தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரையும்விடக் காலத்தால் பிற்பட்டவர் ஆவார். பொதுவாக, காலம் பற்றிய கணிப்பில் தொல் காப்பியருக்கு ஏற்பட்ட நிலையே உரையாசிரியர் களுக்கும் காணப்படுகின்றது.
5. உரையாசிரியர்கள் உரைத்திறன்: ஏற்பும் மறுப்பும்
இறுதி இயலாகிய இப்பகுதியில் பதிப்பாசிரியர், இரா. வெங்கடேசன் உரையாசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒன்றுபட்டும் வேறுபட்டும் காணும் உரைகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.
தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனப் பல்வேறு நிலையில் பரிந்து இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. எல்லா நூல்களுக்கும் அடிப்படையாக அமைவது தொல்காப்பியமே ஆகும். பொதுவாக, முன் தோன்றியவற்றை விடப் பின் தோன்றியவை மேலும் செப்பம் பெற்று அமையும். இக்கால இலக்கியங்களில் இந்த நிலையைக் காணலாம். தொல்காப்பியம் இதற்கு விதிவிலக்காகும். பிற்காலத்துத் தோன்றிய எந்த நூலும் அதனை விஞ்சி நிற்கவில்லை. இதனாலேயே இன்று வரை அறிஞர்களால் விரும்பி ஆராயப்படுகின்றது.

தொல்காப்பியம்

தொல்காப்பியம்

தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றி, மொழியை வளப்படுத்தியுள்ளன. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில் மிகுதியாகத் தோன்றியுள்ளன. நீண்ட வரலாற்றில் அரசாட்சி, பிறமொழிகளின் தாக்கம், சமூக மாற்றம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும் இலக்கியமும் மாறி. எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப் புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம் ஆனது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன. எனவே தமிழில் இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம். தமிழில் உள்ள சில இலக்கண நூல்கள் பற்றிச் சிறு குறிப்பு இங்கே தரப்படுகிறது.
தொல்காப்பியம்
தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவதுதொல்காப்பியம் ஆகும். இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்த நூலில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன. தமிழில் உள்ள இலக்கண நூல்களிலேயே மிகவும் பெரியது தொல்காப்பியம் ஆகும். பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள் இலக்கணமும், யாப்பு இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பியம் திகழ்கிறது.
தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறிய முடிகிறது. பாயிரம் என்பது தற்காலத்தில் எழுதப்படும் முன்னுரை போன்றது. நிலந்தரு திருவின் பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. சிறு இலக்கண விதிகளைக்கூட விட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
1.3.2 நன்னூல்
பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது. நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன. பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத்தரும் முறை, மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும். எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 202 சூத்திரங்கள் உள்ளன. சொல்திகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 205 சூத்திரங்கள் உள்ளன.
அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன்என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன. மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும். எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர். எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்துவருகின்றனர்.
தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் உள்ளன. முக்கியமான இலக்கண நூல்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நூல்ஆசிரியர்காலம்இலக்கண வகை
தொல்காப்பியம்தொல்காப்பியர்கி.மு.4ஆம் நூற்.எழுத்து, சொல், பொருள்
நன்னூல்பவணந்தி முனிவர்13ஆம் நூற்.எழுத்து, சொல்
நேமிநாதம்குணவீர பண்டிதர்12ஆம் நூற்.எழுத்து, சொல்
இறையனார் களவியல்---7ஆம் நூற்.அகப்பொருள்
நம்பியகப் பொருள்நாற்கவிராசநம்பி13ஆம் நூற்.அகப்பொருள்
மாறனகப் பொருள்குருகைப்பெருமாள் கவிராயர்16ஆம்நூற்.அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலைஐயனாரிதனார்9ஆம் நூற்.புறப்பொருள்
யாப்பருங்கலம்அமிர்தசாகரர்10ஆம் நூற்.யாப்பு
யாப்பருங்கலக் காரிகைஅமிர்தசாகரர்10ஆம் நூற்.யாப்பு
தண்டியலங்காரம்தண்டி12ஆம் நூற்.அணி
மாறன் அலங்காரம்குருகைப்பெருமாள் கவிராயர்16ஆம் நூற்.அணி
வீரசோழியம்புத்தமித்திரர்11ஆம் நூற்,ஐந்திலக்கணம்
இலக்கண விளக்கம்வைத்தியநாத தேசிகர்17ஆம் நூற்.ஐந்திலக்கணம்
தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்18ஆம் நூற்.ஐந்திலக்கணம்
சுவாமிநாதம்சுவாமி கவிராயர்18ஆம் நூற்.ஐந்திலக்கணம்
அறுவகை இலக்கணம்தண்டபாணி சுவாமிகள்19ஆம் நூற்.ஐந்திலக்கணம்
முத்துவீரியம்முத்துவீர உபாத்தியாயர்19ஆம் நூற்.ஐந்திலக்கணம்
பன்னிரு பாட்டியல்---10ஆம் நூற்.பாட்டியல்
வெண்பாப் பாட்டியல்குணவீர பண்டிதர்12ஆம் நூற்.பாட்டியல்
இலக்கண விளக்கப் பாட்டியல்தியாகராச தேசிகர்17ஆம் நூற்.பாட்டியல்

திருக்குறள் - திருவள்ளுவர்


திருக்குறள் - திருவள்ளுவர்


இயற்றியவர்: திருவள்ளுவர்


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.
திருக்குறள் (Thirukkural)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி

ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis


தமிழ் இலக்கணம் (Tamil Ilakkanam)

மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..!

Thanjai Periya Kovil

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் – தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil) என அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான இது 1987ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்த கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு சொல்கிறது.
சரி வாங்க தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil) சிறப்புகள் மற்றும் அதன் அம்சம் என்னவென்றால் இக்கோயில் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழுவதே இல்லை என்பதாகும்!!!!

தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil) குறிப்புகள் ..!

தஞ்சை பெரிய கோவில் பெயர்க்காரணம்:

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில்(thanjai periya kovil), இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..!

தஞ்சை பெரிய கோவிலின்(thanjai periya kovil) தல வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட  விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் இந்த தஞ்சை பெரிய கோவில்(thanjai periya kovil). உலகம் வியக்கும் உன்னதமான கோவில்.
இந்த கோவிலை கட்டுவதற்க்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுவும் கற்களை செதுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டுவருவதற்கு 25 ஆண்டுகள் ஆனதாம், பின்பு செதுக்கிய கற்களை செட் செய்வதற்கு 9 ஆண்டுகள் ஆனதாம், மொத்தம் 34 ஆண்டுகள் ஆனதாம்.
கோபுரம் மட்டும் தரைத்தளத்தில் இருந்து 216 அடி உயரத்தில் உள்ளதாம். அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல்லிலாலானது.
இங்கிருந்து 7 கி.மீ தூரத்திற்கு, அருகில் உள்ள சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரேயொரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனர்.
இந்த கோபுத்தத்தின் கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளின் கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோவிலாகும்.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் :-

இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.
இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 34 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார்,23  அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): தமிழகத்தில் இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.
1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில் – பிராத்தனை:

இந்த கோவில் ராஜராஜசோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோவில் என்பதால். இத்தலத்தில் என்ன பிராத்தனை செய்தலும் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
இத்தலத்தில் உள்ள வராகி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பிராத்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் உடனே திருமணம் நடக்குமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிராத்தனை செய்தால், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.
மூலவரான பெருவுடையாரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும், மன அமைதி கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு,ஆகியவற்றிற்காகவும் பிராத்தனை செய்தால், சுவாமி பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்.

தஞ்சை பெரிய கோவில் விசேஷங்கள்:

  1. பிரம்மோற்ஸவம்
  2. ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
  3. அன்னாபிஷேகம்
  4. திருவாதிரை
  5. ஆடிப்பூரம்
  6. கார்த்திகை
  7. பிரதோசம்cf
  8. சிவராத்திரி
  9. தேரோட்டம்

தஞ்சை பெரிய கோவில் (thanjai periya kovil) திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை.
மாலை மணி முதல் 9 மணி வரை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு..!